search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வருகிற 5-ந்தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வருகிற 5-ந்தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

    • தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தெந்த நகரங்களில் தேர்வு மைய கூடங்கள் உள்ளது என்ற விவரம் கடந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது.
    • ஹால் டிக்கெட் பெறுவதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் 011-40759000 அல்லது neet@nta.ac.in இணையதளத்தில் புகார் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை இத்தேர்வு நடக்க இருக்கிறது.

    14 வெளிநாடுகளிலும் நீட் தேர்வு நடக்கிறது. தேர்வை 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

    தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தெந்த நகரங்களில் தேர்வு மைய கூடங்கள் உள்ளது என்ற விவரம் கடந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நீட் தேர்வுக்கு 3 நாட்கள் முன்னதாக தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) இணையத்தில் தேசிய தேர்வு முகமை பதிவேற்றம் செய்தது. https://exams.nta.ac.in/NEET என்ற வெப்சைட்டில் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவம் எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு பெறலாம்.

    ஹால் டிக்கெட் பெறுவதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் 011-40759000 அல்லது neet@nta.ac.in இணையதளத்தில் புகார் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×