search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 1 லட்சம் தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு செய்ய சிறப்பு ஏற்பாடு
    X

    சென்னையில் 1 லட்சம் தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு செய்ய சிறப்பு ஏற்பாடு

    • ஒரு லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் இயக்கத்தை தொடங்கி உள்ளது.
    • 83 தெரு நாய்களை பிடித்து உள்ளோம். 52 நாய்கள் கண்காணிப்பில் உள்ளன.

    சென்னை:

    சென்னை ராயபுரத்தில் கடந்த வாரம் தெருநாய் ஒன்று 28 பேரை ஒரே நேரத்தில் கடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 28 பேரை கடித்த அந்த நாயை பொதுமக்கள் அடித்து கொன்றனர். அதன் உடலை கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்ததில் அந்த நாய்க்கு வெறி நோய் (ரேபிஸ்) பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

    தெரு நாய் கடிக்கு சமீபத்தில் பலர் பாதிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வட சென்னை பகுதி மட்டுமின்றி சென்னை நகர்ப்பகுதி முழுவதும் தெருநாய்களை பிடித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒரு லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் இயக்கத்தை தொடங்கி உள்ளது.

    இந்த ஆண்டு ராயபுரம், திருவொற்றியூர், பெருங்குடி மற்றும் மாதவரம் போன்ற மண்டலங்களில் 5 தெரு நாய்களுக்கு 'வெறிநோய்' பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

    அனைத்திற்கும் இனக்கட்டுப்பாடு செய்ய இந்த சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.

    ராயபுரம் மண்டலத்தில் 28 பேரை வெறிநாய் கடித்து உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 28 பேரின் முகவரி சேகரித்து கண் காணிக்கப்படுகிறது.

    அவர்களை கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் இன்யூனோ குளோடிலின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.

    அவர்கள் 3-ம் நாள், 7-வது நாள், 14-ம் நாள், 28-வது நாள் தடுப்பூசி செலுத்தி கொள்வார்கள்.

    அந்த தெரு நாய்க்கு ரேபிஸ் இருப்பது உறுதியானவுடன் வார்டுகள் 49, 50 மற்றும் 52 பகுதிகளில் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 83 தெரு நாய்களை பிடித்து உள்ளோம். 52 நாய்கள் கண்காணிப்பில் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×