search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தரம் பிரிக்கப்படாமல் குவியும் குப்பைகளால் திணறும் மேடவாக்கம் ஊராட்சி
    X

    தரம் பிரிக்கப்படாமல் குவியும் குப்பைகளால் திணறும் மேடவாக்கம் ஊராட்சி

    • குப்பை கொட்டப்படும் காலி இடம் முன்னர் நீர்நிலையாக இருந்ததாக கூறப்படுகிறது.
    • ஊாட்சி நிர்வாகம் குப்பைகளை கையாள்வதில் தணறி வருகிறது.

    வேளச்சேரி:

    சென்னைைய அடுத்த மேடவாக்கம் சோழிங்க நல்லூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்டது.

    சென்னை புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் மேடவாக்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் மற்றும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

    இதனால் அப்பகுதியில் குடியிருப்புகள் அதிக அளவில் பெருகி மக்கள் தொகை அதிகரித்து உள்ளது. இதேபோல் வாகன நெரிசலும் பல மடங்கு உயர்ந்து விட்டன.

    இந்த நிலையில் மேடவாக்கம் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம்பிரிக்கப்படாமல் குவிந்து வருவதால் அதனை கையாள்வதில் ஊராட்சி நிர்வாகம் கடும் சிரமம் அடைந்து வருகிறது.

    தினந்தாறும் சுமார் ஒரு லட்சம் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் பள்ளிக்கரணை போலீஸ்நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி குப்பை மேடாக மாறி உள்ளது.

    குப்பை கொட்டப்படும் காலி இடம் முன்னர் நீர்நிலையாக இருந்ததாக கூறப்படுகிறது. கூகுள் மேப்பிலும் அப்படியே உள்ளது. ஆனால் தற்போது அந்த இடம் குப்பை மேடாக மாறி வருவது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, தினமும் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள மைதானத்தில் கொட்டப்படுகிறது. ஊராட்சியில் குறைந்த அளவிலான ஊழியர்கள் உள்ளதால் குப்பைகள் தரம்பிரிக்கப்படாமல் அப்படியே கொட்டுகின்றனர். இதனால் ஊாட்சி நிர்வாகம் குப்பைகளை கையாள்வதில் தணறி வருகிறது.

    திடக்கழிவு மேலாண்மை பின்பற்றப்படவில்லை. ஊராட்சி மூலம் நுண் உரம் தயாரிக்கும் வசதி செயல்படுத்தப்படவில்லை. தரம் பிரிக்கப்படாத குப்பைகளை திறந்தவெளியில் கொட்டக்கூடாது என்று திடக்கழிவு மேலாண்மை விதி உள்ளது. ஆனால் இது மீறப்பட்டு குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டுவதால் நிலத்தடி நீர் மற்றும் அப்பகுதி பாதிக்கப்படுகிறது என்றார்.

    இதுகுறித்து ஊராட்சி தலைவி சிவபூஷணம் ரவி கூறும்போது, ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பள்ளிக்கரணை பகுதியில் கொட்டப்பட்டு பின்னர் ஆப்பூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு குப்பைகள் கொட்ட இடம் ஒதுக்கி உள்ளனர்.

    குப்பைகள் தினந்தோறும் லாரிகள்மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. மொத்தம் 36 தொழிலாளர்கள் உள்ளனர். டிராக்டர், லாரிகள் மூலம் குப்பைகள் தேங்கமால் அகற்றி வருகிறோம் என்றார்.

    இதற்கிடையே ஏற்கனவே தேசிய பசுமைதீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம், மற்றும் மேடவாக்கம் ஊராட்சிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் திடக்கழிவு மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக நிதியுதவி உள்ளிட்ட அனைத்து தேவையான அனுமதியைப் அரசிடம் இருந்து பெற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×