search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் மெட்ராஸ் ஐ பரவுகிறது- கவனம் தேவை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னையில் மெட்ராஸ் ஐ பரவுகிறது- கவனம் தேவை

    • ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால் மற்றொரு கண்ணிலும் வர அதிக வாய்ப்பு உண்டு.
    • மெட்ராஸ் ஐ தொற்று ஏற்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    காலநிலை மாற்றத்தால் சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவுகிறது. மருத்துவமனைகளில் தினமும் குறைந்த பட்சம் 50 பேர் சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று காரணமாகத்தான் மெட்ராஸ் ஐ ஏற்படுகிறது. இது காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவுகிறது.

    கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து போதல், நீர் சுரந்து கொண்டே இருந்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்தல் ஆகியவை முக்கிய அறிகுறி. வெளியே நடமாடும் போது கண் கூச்சமாக இருக்கும்.

    இது பற்றி கண் மருத்துவர்கள் கூறும்போது, மெட்ராஸ் ஐ பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் கைகுட்டை போன்ற பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினால் தொற்று வரும். ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால் மற்றொரு கண்ணிலும் வர அதிக வாய்ப்பு உண்டு.

    குணப்படுத்தக்கூடிய சாதாரண தொற்று தான். முதலிலேயே உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். காலம் தாழ்த்தினால் பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்படும். எனவே மெட்ராஸ் ஐ தொற்று ஏற்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

    ராஜன் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மோகன் ராஜன் கூறியதாவது:-

    இது சாதாராண தொற்று வியாதி தான். சிலருக்கு மெட்ராஸ் ஐ வந்தால் காய்ச்சல், சளிகூட ஏற்படும். இந்த வைரசால் நுரையீரல் பாதிப்பெல்லாம் வராது.

    குளிர்சாதன அறையில் மெட்ராஸ் ஐ தாக்கியவர்கள் இருந்தால் மற்றவர்களுக்கு வேகமாக பரவும். 3 முதல் 4 நாட்கள் வரை இருக்கும். மெட்ராஸ் ஐ வந்தால் தனி அறையில் இருக்க வேண்டும். தனியாக டவல், சோப்பு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.

    கண் வலிதான் என்று மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்த கூடாது. சில நேரங்களில் கருவிழி பாதிப்பு கூட ஏற்படலாம். கண்ணை கண்போல் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×