search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜனதா அணிகள் நடத்தும் அமலாக்கத்துறை சோதனைகளை சட்டப்படி சந்திப்போம்- உதயநிதி ஸ்டாலின் பேட்டி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பா.ஜனதா அணிகள் நடத்தும் அமலாக்கத்துறை சோதனைகளை சட்டப்படி சந்திப்போம்- உதயநிதி ஸ்டாலின் பேட்டி

    • 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்ற இலக்குடன் நடந்து வருகிறோம்.
    • நீட் விலக்கு என்பதும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஒன்றுதான்.

    சென்னை:

    நீட் விலக்கு நமது இலக்கு என்று கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறுவதற்காக இன்று சத்யமூர்த்தி பவன் சென்றார்.

    அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்றார். அதை தொடர்ந்து கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்திட்டனர். முன்னாள் மாநில தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, எம்.எல்.ஏ.க்கள் அசன்மவுலானா, துரைசந்திரசேகர், அரசு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், அகரம் கோபி, மாவட்ட தலைவர்கள் எம்.ஏ.முத்தழகன், சிவராஜ சேகரன், டில்லிபாபு, அடையாறு துரை, ரஞ்சன்குமார், எம்.எஸ்.திரவியம் உள்பட பலர் கையெழுத்திட்டனர்.

    பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் விலக்கு நமது இலக்கு என்ற இந்த கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறது.

    50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்ற இலக்குடன் நடந்து வருகிறோம்.

    நீட் விலக்கு என்பதும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஒன்றுதான். கடந்த 6 வருடத்தில் நீட் தேர்வால் 22 மாணவர்கள் இறந்து உள்ளார்கள்.

    கையெழுத்து இயக்கம் தொடங்கி இதுவரை ஆன்லைனில் 3 லட்சம் பேர் கையெழுத்து போட்டு உள்ளார்கள். 10 லட்சம் தபால் அட்டைகள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதில் 8 லட்சம் கார்டுகள் கையெழுத்தாகி உள்ளன.

    இன்று கூட்டணி கட்சித் தலைவர்களிடம் வாங்கி வருகிறோம். இது தி.மு.க.வுக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. எல்லா கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும்.

    எனவே எல்லா கட்சியினரிடமும் சென்று கையெழுத்து வாங்குவேன். வருமான வரித்துறை, அமலாக்கத் துறை எல்லாமே பா.ஜனதாவின் பல்வேறு அணிகள் போல்தான் செயல்படுகிறது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இந்த அணிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்த அணிகள் நடத்தும் சோதனைகளை கண்டு அஞ்சப் போவதில்லை. சட்டப்படி சந்திப்போம்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    Next Story
    ×