search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மாநகராட்சி-அரசு அலுவலகங்களில் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டியது
    X

    சென்னை மாநகராட்சி-அரசு அலுவலகங்களில் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டியது

    • சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
    • கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, துணை மேயர் மகேஸ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது.

    தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இனிப்புகள் வழங்கி மக்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தினவிழா களைகட்டி காணப்பட்டது.

    சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மனுநீதி சோழன் சிலை அருகே உள்ள கொடிகம்பத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மூத்த நீதிபகள் துரைசாமி, டி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஐகோர்ட்டில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு தலைமை நீதிபதி தங்க பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

    சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, துணை மேயர் மகேஸ்குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

    மாநகர போக்குவரத்து கழக பல்லவன் இல்ல வளாகத்தில் மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

    ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் டீன் தேரணிராஜன், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் டீன் பாலாஜி, கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் டீன் சாந்தி மலர், பல்நோக்கு மருத்துவமனையில் இயக்குனர் விமலா ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினர்.

    தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆணையர் இளங்கோவன், பொறியாளர் முருகேசன், மக்கள் நல அதிகாரி பார்த்திபன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கோயம்பேட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். வீட்டு வசதி துறை மேலாண்மை இயக்குனர் சுன்சோங்கம் ஜடக் சிரு, செயலாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சரவண மூர்த்தி, தலைமை பொறியாளர்கள் கமலக்கண்ணன், சரவணன், தலைமை வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் ராஜலட்சுமி, பர்கத் பேகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    இதேபோன்று அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

    தேனாம்பேட்டையில் உள்ள இந்திய தணிக்கை அலுவலகத்திலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    Next Story
    ×