search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை மாவட்ட கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளிடம் இருந்து தரமற்ற நெல் வாங்கப்பட்டதா?- அதிகாரிகள் விசாரணை
    X

    மதுரை மாவட்ட கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளிடம் இருந்து தரமற்ற நெல் வாங்கப்பட்டதா?- அதிகாரிகள் விசாரணை

    • மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விவசாயிகள் என்று கூறி தரமற்ற நெல்லை வழங்கியதாக கூறப்படுகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், கிண்ணி மங்கலம், கொக்குளம், சாப்டூர், வால்ராஜபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இதே பகுதியில் வசிக்கும் ஒரு சில வியாபாரிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களை விவசாயிகள் என்று கூறி தரமற்ற நெல்லை வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி விவசாயிகள் புகார் செய்ததால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் உத்தரவின் பெயரில் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் வாங்கப்பட்ட நெல்லை சோதனை செய்து பார்த்தனர். இதில் அவை சமீபத்தில் அறுவடை செய்த நெல் அல்ல. அவை தரமற்றவை என ஆய்வில் தெரியவந்தது.

    எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக துணை மண்டல மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×