search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்ட மின் கட்டணம்-  முழு விவரம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்ட மின் கட்டணம்- முழு விவரம்

    • பொதுமக்களின் கருத்தை பரிசீலித்து வந்த நிலையில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • 100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்குவது தொடரும். அதேபோல் குடிசை, கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. அதே நேரம் கடந்த 10 ஆண்டுகளில் மின்வாரியத்துக்கான கடனில் ரூ.12,647 கோடி அதிகரித்துள்ளது.

    இதையடுத்து மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை மாற்றி அமைக்கும் படி தமிழக மின்வாரியத்தை கேட்டுக்கொண்டது.

    இது தொடர்பாக பல முறை கடிதம் எழுதிய நிலையில் கடந்த ஜூலை மாதம் புதிய மின் கட்டண உயர்வு தொடர்பாக பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதாவது வீடுகளுக்கான மின்சார கட்டணம் மாதம் ரூ.27.50 முதல் ரூ.565 வரை உயர்த்தப்பட்டது.

    அதன்படி 2 மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ரூ.27.50 உயர்த்தப்பட்டது. மொத்த மின் நுகர்வோரில் இந்த பிரிவினர் தான் அதிகம். 63.35 லட்சம் வீடுகளில் 200 யூனிட் வரைதான் மின் பயன்பாடு உள்ளது.

    300 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ரூ.72.50, 400 யூனிட்டுகள் வரை மாதம் ரூ.147.50, 500 யூனிட்டுகள் வரை மாதம் ரூ.297.50, 600 யூனிட்டுகள் வரை ரூ.155, 700 யூனிட்டுகள் வரை ரூ.275, 800 யூனிட்டுகள் வரை ரூ.395, 900 யூனிட்டுகள் வரை ரூ.565 என்று உயர்த்தி அமைத்தனர்.

    இந்த கட்டண உயர்வு நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும் என்று கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்க மின்வாரியம் முடிவு செய்தது. அதன்படி சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    பொதுமக்கள் தரப்பில் கட்டண உயர்வுக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. ஒரேயடியாக 26 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட சதவீதத்தை 10 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் சாதாரணமாக 500 யூனிட்டுகள் வரை பயன்பாடு இருக்கும் என்பதால் மாதம் ரூ.297.50 உயர்த்தப்படுவதை பாதியாக குறைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

    பொதுமக்களின் கருத்தை பரிசீலித்து வந்த நிலையில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்குவது தொடரும். அதேபோல் குடிசை, கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

    இனி 2 மாதம் 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்கள் மாதம் ரூ.27.50 வீதம் 2 மாதத்துக்கு ரூ.55 கூடுதலாக செலுத்த வேண்டும்.

    300 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்கள் மாதம் ரூ.72.50 வீதம் 2 மாதத்துக்கு ரூ.145 கூடுதலாக செலுத்த வேண்டும்.

    400 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்கள் மாதம் ரூ.147.50 வீதம் 2 மாதத்துக்கு ரூ.295 கூடுதலாக செலுத்த வேண்டும்.

    500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.297.50 வீதம் 2 மாதத்துக்கு ரூ.595 கூடுதலாக செலுத்த வேண்டும்.

    600 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் ரூ.155 வீதம் 2 மாதத்துக்கு ரூ.310 கூடுதல் செலுத்த வேண்டும்.

    700 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.275 வீதம் 2 மாதத்துக்கு ரூ.550 கூடுதலாக வசூலிக்கப்படும்.

    800 யூனிட்டுகள் பயன்படுத்தினால் மாதம் ரூ.395 வீதம் 2 மாதத்துக்கு ரூ.790 கூடுதல் கட்டணம் கட்ட வேண்டும்.

    900 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.565 வீதம் ரூ.1130 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்குவது மற்றும் மின்மானியம் வழங்குவது ஆகியவற்றை விரும்பாதவர்கள் விட்டுக்கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த புதிய கட்டண உயர்வு அடுத்த 5 ஆண்டுகள் (2026-27) வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


    யூனிட்டுகள்வீடுகள் எண்ணிக்கை
    கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு)
    2௦௦ வரை
    63.35 லட்சம்
    ரூ.55

    3௦௦ வரை

    36. 25 லட்சம்

    ரூ.145
    4௦௦ வரை

    18.82 லட்சம்

    ரூ.295
    5௦௦ வரை
    10.56 லட்சம்

    ரூ.595

    6௦௦ வரை
    3.14 லட்சம்

    ரூ. 310

    7௦௦ வரை
    1.96 லட்சம்

    ரூ.550

    8௦௦ வரை
    1.26 லட்சம்

    ரூ.790

    9௦௦ வரை
    84 ஆயிரம்

    ரூ.1130


    Next Story
    ×