search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை ஐகோர்ட்டில் மணல் விற்பனை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
    X

    மதுரை ஐகோர்ட்டில் மணல் விற்பனை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

    • தமிழக அரசு தற்போது நேரடியாக மணல் விற்பனை செய்கிறது.
    • தமிழக அரசின் ஆணையின் அடிப்படையில் யூனிட் அளவில் மணல் விற்கப்படுகிறது.

    மதுரை:

    திருச்சியைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு தற்போது நேரடியாக மணல் விற்பனை செய்கிறது. தமிழக அரசின் ஆணையின் அடிப்படையில் யூனிட் அளவில் மணல் விற்கப்படுகிறது. ஆனால் இது தர நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடு கிடையாது.

    இவ்வாறு முறையாக அளவீடு செய்யப்படாமல் விற்பனை செய்யப்படுவதால், அரசுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. முறைகேடுகளும் நடக்க காரணமாகின்றன. கியூபிக், மெட்ரிக் அளவில் மணல் விற்பனை செய்வதுதான் சரியாக இருக்கும்.

    இதனை முறைப்படுத்தக்கோரி அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மணல் விற்பனை செய்ய தரநிர்ணய அளவீட்டை உருவாக்கி, அதன் அடிப்படையில் மணல் விற்பனையை செய்யவும், யூனிட் அளவில் விற்க தடைவிதித்தும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ஒரு யூனிட் என்பது 2.83 கியூபிக் மீட்டர் ஆகும். எனவே விதிகளின்படிதான் மணல் விற்பனை நடக்கிறது என்றார்.

    அதற்கு மனுதாரர் நேரில் ஆஜராகி, மெட்ரிக் அளவு முறை விதிகள், மணல் விற்பனையில் முழுமையாக பின்பற்றப்படவில்லை. தோராயமாகத்தான் மணல் அளவீடு உள்ளது. இதனால் அரசுக்கு ஏராளமான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    இருதரப்பு வாதங்க ளையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இன்று அதே நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கினை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.

    Next Story
    ×