search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனியார் பள்ளி சூறையாடல்: வன்முறையை மேலும் தூண்டும் வகையில் வாட்ஸ்அப் பதிவிட்ட 4 வாலிபர்கள் கைது
    X

    தனியார் பள்ளி சூறையாடல்: வன்முறையை மேலும் தூண்டும் வகையில் வாட்ஸ்அப் பதிவிட்ட 4 வாலிபர்கள் கைது

    • போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து பள்ளி வாகனங்களை தீவைத்து பொருட்களை சூறையாடினர்.
    • தனியார் பள்ளி நிர்வாகம்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

    கரூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த 13-ந்தேதி இறந்தார்.

    இதையஎடுத்து அந்த மாணவியின் பெற்றோர்கள் உறவினர்கள் ஊர் மக்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், மாணவியின் உடலை பெறாமலும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டம் கலவரமாக மாறியது. போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து பள்ளி வாகனங்களை தீவைத்து பொருட்களை சூறையாடினர்.

    இந்த சம்பவம் தனியார் பள்ளி நிர்வாகம்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. மேற்கண்ட சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு கோரி இன்று வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மேற்கண்ட பள்ளி கலவர காட்சிகளை இணைத்து மேலும் பிரச்சினைகளை தூண்டும் வகையில் வாட்ஸ்அப்பில் பதிவுகள் அனுப்பியதாக கரூர் பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில பொருளாளர் சுரேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர கமிட்டி தலைவர் சிவா மற்றும் சங்கர், தமிழரசன் ஆகிய 4 பேரை பசுபதிபாளையம் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இவர்கள் மீது கூட்டு சதி, அரசுக்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×