search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    X

    கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    • கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் நலன் காக்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
    • தமிழ்நாடு அரசு தாய் சேய் நலன் காக்க இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

    சென்னை:

    வாழ்வின் முதல் ஆயிரம் நாட்கள் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் 5,694 பெண்களுக்கு ரூ.50 லட்சம் நிதி உதவியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

    பின்னர் இந்த திட்டம் குறித்து அவர் கூறியதாவது:-

    கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் நலன் காக்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

    குழந்தைகளின் முதல் 1000 நாட்கள் உதவும் வகையில் கர்ப்பிணி தாய் மார்களுக்கான நிதியுதவி திட்டம் தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று 5294 கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் 3 தவணை வழங்கப்பட உள்ளது.

    கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்குகின்ற ரூ.5000 நிதி உதவி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் அடுத்த ஆயிரம் நாட்களில் தேவைப்படும் ஊட்டச்சத்தை பூர்த்தி செய்ய வழங்கப்படுகின்றது. தமிழ்நாடு அரசு தாய் சேய் நலன் காக்க இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் மருத்துவ குறியீடுகள் கணக்கிடப்பட்டு 14 மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, ரத்தசோகை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் உள்ள 23 வட்டாரங்களில் உள்ள 118 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு வருடத்தில் 37 ஆயிரத்து 200 குழந்தைகள் பிறக்கின்றன. 2 வருடங்களுக்கு 74 ஆயிரத்து 400 குழந்தைகள். இக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்திற்காக கர்ப்பம் தரித்தஉடன் முதல் தவணையாக 20, 28, 38-வது வாரங்களில் ரூ.1000, 6-வது மாதம் 4ம் தவணை ரூ.500 24வது மாதம் 7-வது தவணை ரூ.500 என மொத்தமாக கர்ப்ப காலத்தில் ரூ.3000, 2 வயது வரை குழந்தை வளரும் பருவத்தில் ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    குழந்தை இறப்பு விகிதத்தில் இந்தியாவில் ஆயிரத்திற்கு 28, தமிழ்நாடு அளவில் ஆயிரத்திற்கு 13, மகப்பேறு இறப்பு விகிதம் இந்திய அளவில் ஒரு லட்சத்திற்கு 97, தமிழ்நாடு அளவில் ஒரு லட்சத்திற்கு 54 என்ற விகிதத்தில் உள்ளது. இதனை மேலும் குறைத்திடும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளார். இதற்காக ரூ.38.20 கோடி ஒதுக்கியுள்ளார்.

    இத்திட்டத்தின் மூலம் கர்ப்ப கால ரத்த சோகை தடுக்கப்படும். அதே போன்று பேறுகால குழந்தைகள் எடை சீரானதாக இருக்கும். 2 வருடத்திற்கான குழந்தை வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும். அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி கிடைப்பது உறுதி செய்யப்படும். எடை குறைவான குழந்தைகள் பிறப்பதை முற்றிலுமாக தவிர்த்திட முடியும். கர்ப்ப கால பிரச்சினைகளை மேம்படுத்திட முடியும். அனைத்து தாய் சேய் நல குறியீடுகளை மேம்படுத்துதல், பிரச்சினைகள் உள்ள கர்ப்பிணி தாய்மார்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களை காத்திட முடியும். கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கும் இந்த நிதியுதவிக்கான பணத்தினை கட்டாயம் தாய்மார்களின் ஊட்டச்சத்தையும் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் மேம்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இத்திட்டம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களை தமிழ்நாடு முழுவதிலும் கண்டறிந்து அவர்களுக்கான சிறப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது.

    இதுவரை 8,163 தாய் மார்கள் இத்திட்டம் மூலம் பயன்அடைந்துள்ளனர். இன்று 5,294 தாய்மார்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ரூ.1000க்கான நிதி உதிவி வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×