search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்க தேனியில் தனிப்படை போலீசார் முகாம்
    X

    கடத்தப்பட்ட குழந்தை ஸ்ரீஹரிஷ்

    திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்க தேனியில் தனிப்படை போலீசார் முகாம்

    • முத்துராஜ் தனது குடும்பத்துடன் கடந்த 5-ந் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார்.
    • போலீசாரின் தொடர் விசாரணையில் கடத்தலில் ஈடுபட்ட பெண் தேனி பகுதிக்கு சென்றதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    திருச்செந்தூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துராஜ். இவரது மனைவி ரதி. இவர்களது 1½ வயது ஆண் குழந்தை ஸ்ரீஹரிஸ்.

    முத்துராஜ் தனது குடும்பத்துடன் கடந்த 5-ந் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். அப்போது அவர்களுடன் 40 வயது பெண் ஒருவர் அறிமுகமானார். பின்னர் அதனை பயன்படுத்தி அந்த பெண், கோவில் வளாகத்தில் வைத்து குழந்தையை கடத்தி சென்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ரதி கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த பெண்ணுடன், ஒரு வாலிபரும் மோட்டார் சைக்கிளில் குழந்தையை திருடிச் சென்றது தெரியவந்தது. அந்தக் காட்சிகளை வைத்து கடத்தலில் ஈடுபட்டது யார்? என விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் தொடர் விசாரணையில் கடத்தலில் ஈடுபட்ட பெண் தேனி பகுதிக்கு சென்றதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தேனிக்கு விரைந்து உள்ளனர். அங்கு அந்த பெண் மற்றும் வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களை பிடித்தால் தான் அவர்கள் யார்? பணத்திற்காக கடத்தலில் ஈடுபட்டனரா? அல்லது குழந்தை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×