search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு- அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
    X

    ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு- அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

    • ஜம்பலப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் கடந்த 20 ஆண்டுகளாக தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
    • மீட்கப்பட்ட நிலத்தில் அறநிலையத்துறையின் சார்பில் எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆண்டியகவுண்டனூர் பகுதியில் ஜம்பலப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த 20 ஆண்டுகளாக தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்த சமயஅறநிலையத்துறை ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து இணை ஆணையர் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி நிலம் கோவில் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    அதன்படி ரூ. 5 கோடி மதிப்பிலான 32.87 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் மீட்கப்பட்ட நிலத்தில் அறநிலையத்துறையின் சார்பில் எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டது. அதில் கோவில் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ய கூடாதெனவும் மீறுபவர்கள் மீது அறநிலையத்துறையின் சட்டதிட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×