என் மலர்

  தமிழ்நாடு

  காயல்பட்டினத்தில் பாதை பிரச்சினையில் தாக்கப்பட்ட அ.ம.மு.க. பிரமுகர் உயிரிழப்பு- வாலிபருக்கு வலைவீச்சு
  X

  உயிரிழந்த நைனா முகமது.

  காயல்பட்டினத்தில் பாதை பிரச்சினையில் தாக்கப்பட்ட அ.ம.மு.க. பிரமுகர் உயிரிழப்பு- வாலிபருக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாதை பிரச்சினையில் ஆத்திரம் அடைந்த நவ்பள், நைனா முகமதுவை அடித்து உதைத்துள்ளார்.
  • நெஞ்சில் பலத்த அடிபட்டு நைனா முகமது நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  ஆறுமுகநேரி:

  தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஹாஜி அப்பா தைக்கா தெருவை சேர்ந்தவர் நைனா முகமது (வயது 56). அ.ம.மு.க. பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு செய்யது அகமது பாத்திமா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

  நைனா முகமதுவின் தாய் தனி வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த அபுல் ஹாசன் மகன் நவ்பள் (26) என்பவரது வீட்டிற்கும் இடையில் முடுக்கு பாதை சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது.

  இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி காலையில் நைனா முகமதுவின் தாய் வீட்டின் ஒரு பகுதியை நவ்பள் இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கேள்விப்பட்டு நைனா முகமது அங்கு சென்றுள்ளார்.

  அப்போது ஆத்திரம் அடைந்த நவ்பள், நைனா முகமதுவை அடித்து உதைத்துள்ளார். இதில் நெஞ்சில் பலத்த அடிபட்டு நைனா முகமது நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலையில் பரிதாபமாக இருந்தார்.

  இச்சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்து நவ்பளை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×