search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதிகரிக்கும் கொரோனா- பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுரை
    X

    (கோப்பு படம்)

    அதிகரிக்கும் கொரோனா- பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுரை

    • பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் போது எச்சில் தொட்டு வழங்கக் கூடாது.
    • பயணச் சீட்டு வழங்கும் போது தண்ணீர் உறிஞ்சும் ஸ்பாஞ்சை பயன்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் தமிழக போக்குவரத்துறை, அரசு போக்குவரத்துக்கழக பேருந்து நடத்துநர்களுக்கு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

    நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நடத்துநர்கள் பயணச்சீட்டு வழங்கும் போது எச்சில் தொட்டு வழங்கக் கூடாது.

    இதனால் பயணிகளுக்கு மன உளைச்சலும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. பயணச் சீட்டு வழங்கும் போது தண்ணீர் உறிஞ்சும் ஸ்பாஞ்சை பயன்படுத்தி வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும்.

    இவ்வாறு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×