search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகை- பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகை- பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • கன்னியாகுமரி நகர பகுதி முழுவதும் இன்று முதல் வருகிற 17-ந்தேதி வரை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில பாரத தலைவர் மோகன் பகவத் இன்று மாலை 4 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். வருகிற 17-ந்தேதி வரை அவர் கன்னியாகுமரியில் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு வரும் அவருக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகம் சார்பில் அதன் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு விவேகானந்தா கேந்திராவில் தங்குகிறார். நாளை காலை விவேகானந்த கேந்திர நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    நாளை மறுநாள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிடுகிறார். 17-ந் தேதி மதியம் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு செல்கிறார். அகில பாரத ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி நகர பகுதி முழுவதும் இன்று முதல் வருகிற 17-ந்தேதி வரை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கட லோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×