search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா- சென்னையில் விற்பனைக்கு குவிந்த கிருஷ்ணர் சிலைகள்
    X

    கிருஷ்ணர் சிலைகள்

    நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா- சென்னையில் விற்பனைக்கு குவிந்த கிருஷ்ணர் சிலைகள்

    • ரூ.50 முதல் ரூ.1000 வரையிலான விலையில் கிருஷ்ணர் சிலைகள் தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகின்றன.
    • பொதுமக்கள் அதிக அளவில் கிருஷ்ணர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.

    சென்னை:

    கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுவதை யொட்டி சென்னையில் வண்ணங்களில் தயாரான கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளது.

    கிருஷ்ணஜெயந்தி விழா நாளை (19- ந்தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் தயாரான பலவிதமான கிருஷ்ணர் சிலைகள் சென்னையில் விற்பனைக்கு குவிந்து உள்ளன.

    சென்னை புரசைவாக்கம், பெரம்பூர், கொசப்பேட்டை, தி.நகர், திருவல்லிக்கேணி, வடபழனி, வண்ணாரப்பேட்டை, ராயப்பேட்டை, அரும்பாக்கம், கோயம்பேடு, உள்பட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    கண்ணைக்கவரும் வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட விதவிதமான கிருஷ்ணர்-ராதை மற்றும் குழந்தை வடிவ கிருஷ்ணர், வெண்ணை திருடி சாப்பிடும் கிருஷ்ணர், புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர் சிலைகள் வண்ணம் தீட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கிருஷ்ணர் சிலைகள் பொதுமக்களை பெரிதும் கவருகின்றன.

    ரூ.50 முதல் ரூ.1000 வரையிலான விலையில் கிருஷ்ணர் சிலைகள் தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகின்றன.

    அரை அடி முதல் 2அடி வரை களிமண்ணில் தயாரான கிருஷ்ணர் சிலைகள் பலவித வண்ணம் தீட்டப்பட்டு விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளன.

    கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து தயாரான பல ஆயிரக்கணக்கான கண்கவர் வண்ண கிருஷ்ணர் சிலைகள் சென்னைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன. தற்போது விற்பனை சூடு பிடித்து உள்ளது.

    இந்த ஆண்டு கிருஷ்ணர் சிலைகள் விற்பனையை மேலும் அதிகப்படுத்தி உள்ளோம்.

    பொதுமக்கள் அதிக அளவில் கிருஷ்ணர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். இதனால் சென்னையில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை களை கட்டத் தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×