என் மலர்
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமிக்கு ஜே.சி.டி.பிரபாகர் கண்டனம்

- உண்மையான புள்ளி விவரங்களை அளித்தவர் அம்மாதான்.
- எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிறார்.
சென்னை:
ஓ.பி.எஸ். அணி துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குள்ளும் சரி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு வெளியேயும் சரி, தி.மு.க. செய்த தவறுகளை, தி.மு.க. தமிழ்நாட்டிற்கு இழைத்த துரோகங்களை, புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டு தமிழ்நாட்டு மக்களின் அன்பைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தவர் புரட்சித்தலைவி அம்மா. உண்மையான புள்ளி விவரங்களை அளித்தவர் அம்மாதான். தவறான புள்ளி விவரங்களை அளித்தவர் கருணாநிதி.
இந்த உண்மைக்கூட தெரியாமல், தன் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போரை அழைத்து "விவாதங்களை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் நமக்கு முன்னோடி. அவர் ஒரு ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டும் என்றால், அனைத்து விபரங்களையும் கையில் வைத்தபடி பேசுவார். அதுபோல நீங்களும் எல்லாவிதமான புள்ளி விபரங்களுடன் விவாதத்தில் பங்கேற்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக செய்தி வந்து உள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.