search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்துவிட்டீர்களா? நாளை கடைசி நாள்
    X

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்துவிட்டீர்களா? நாளை கடைசி நாள்

    • கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர்.
    • நாளைக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த நிதியாண்டுக்கான (2021-2022) வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த 3 வருடங்களாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த வருடம் ஜூலை 31ம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.

    இதற்கிடையே வருமான வரி கணக்கை தாக்கல் செய்து ஜூலை 31ம் தேதிக்குள் வரியை கட்ட முடியாது என்பதால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்தனர். சமூக வலைத்தளங்களில் #Extend_Due_Date_Immediately #ExtendDueDate போன்ற ஹேஷ்டேக் வைரலானது. குறிப்பாக பெரும்பாலானோர் இந்த ஹேஷ்டேக்கை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தை டேக் செய்திருந்தனர். ஆனாலும் கால நீட்டிப்பு கிடையாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.

    எனவே நாளைக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துவிடுவது நல்லது. அதன்பின்னர் தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சதத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

    Next Story
    ×