search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கால்நடைகளுக்கு தடுப்பூசி-  மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    கால்நடைகளுக்கு தடுப்பூசி- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    • செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய தடுப்பூசி இதுவரை வழங்கப்படவில்லை.
    • கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க கோரிக்கை.

    கால்நடைகளுக்கான தடுப்பூசி கோரி, மத்திய கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழ்நாட்டிற்கு, தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் (கோமாரி நோய் மற்றும் கன்றுவீச்சு நோய்) கடந்த செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய தடுப்பூசி இதுநாள் வரையில் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

    இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுத்திடவும், அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தியினைப் பராமரித்திடவும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுத்திடவும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 லட்சம் தடுப் பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தமது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

    Next Story
    ×