search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகளுக்கு தடை
    X

    தொடர் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகளுக்கு தடை

    • கடந்த சில தினங்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
    • இன்று விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு வந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி மிக முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு பூத நாராயணன் கோவில், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பழமை வாய்ந்த கோவில்கள் இருப்பதால் தேனி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

    கம்பம் கிழக்கு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுருளி அருவிக்கு ஈத்தக்காடு, அரிசி பாறை போன்ற ஊற்று பகுதிகளிலும் தூவானம் அணையில் இருந்து வரும் தண்ணீரும் சேர்ந்து அருவியாய் கொட்டுகிறது.

    தற்போது கடந்த சில தினங்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

    இதனிடையே நேற்று இரவு சுருளி அருவியில் நீர் வரத்து பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்ததால் இன்று காலை சுருளி அருவியில் வந்து கொண்டிருந்த தண்ணீரின் வேகம் அதிகரித்து தற்போது அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு வந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

    எனினும் கம்பம் கிழக்கு வனத்துறையினர் தொடர்ந்து அருவிப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×