search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
    X

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் முறையீடு

    • சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அதை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது.
    • விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

    சென்னை:

    ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அதை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது.

    இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி முறையீடு செய்தார். அப்போது மனுதாக்கல் செய்து, மனு முறையாக இருந்தால் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும், இல்லாவிட்டால் வழக்கமான பட்டியலில் இடம்பெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×