search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் 7 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
    X

    மேட்டூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை உள்பட எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் 7 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

    • சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேட்டூரில் சதுரங்காடி காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சேலம்:

    சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேட்டூரில் சதுரங்காடி காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் எம்.பி. வரவேற்றார். அமைப்பு செயலாளர் செம்மலை கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஓமலூர் மணி, சங்ககிரி சுந்தரராஜன், வீரபாண்டி ராஜமுத்து, ஏற்காடு சித்ரா, ஆத்தூர் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் ஒன்றிய செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.

    சேலத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×