search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆதீன மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வராது- மதுரை ஐகோர்ட்
    X

    ஆதீன மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வராது- மதுரை ஐகோர்ட்

    • தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பொது நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் தான் வரும்.
    • ஆதீன மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல.

    மதுரை:

    தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பழமையான ஆதீன மடங்களில் எங்கள் மடமும் ஒன்று. எங்கள் மடமானது, சைவ சித்தாந்த மரபை சார்ந்தது. அரசிடம் இருந்து எந்தவித உதவியோ, நிதியோ நாங்கள் பெறுவதில்லை. மடத்தின் சொந்த நிதியை மட்டும் பயன்படுத்தி, எங்கள் மடம் இயங்குகிறது.

    ஆதீன மடம் மற்றும் ஆதீன கர்த்தர் குறித்த விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டு சிலர் தொந்தரவு செய்கின்றனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பொது நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் தான் வரும்.

    ஆதீன மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல. எனவே ஆதீனம் பொது நிறுவனம் அல்ல என்பதால் ஆதீன மடங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வராது என உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    முடிவில், ஆதீன மடங்கள் சம்பந்தப்பட்ட விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டு வராது என உத்தரவிட்டார்.

    Next Story
    ×