search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழங்கால 100 வகை உணவுகளுடன் தீவுத்திடலில் பாரம்பரிய உணவு கண்காட்சி
    X

    உணவு திருவிழா கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா

    பழங்கால 100 வகை உணவுகளுடன் தீவுத்திடலில் பாரம்பரிய உணவு கண்காட்சி

    • பாரம்பரிய சிறுதானியங்கள், பாரம்பரிய சம்பா அரிசி ரகங்களில் செய்யப்பட்ட உணவுகள், அதிரசம் முறுக்கு, சீடை வகைகள் இடம்பெற்று இருந்தன.
    • பாரம்பரிய உணவு சார்ந்த போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் 100 வகையான பாரம்பரிய உணவுகளுடன் உணவு திருவிழா கண்காட்சி இன்று தொடங்கியது.

    உணவு பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் உணவுத்திருவிழா கண்காட்சி இன்று தொடங்கியது.

    கண்காட்சியை அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இதில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். வருகிற 14 ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய 100 உணவு வகைகள் விதவிதமாக கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இதில் 150 உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பாரம்பரிய சிறுதானியங்கள், பாரம்பரிய சம்பா அரிசி ரகங்களில் செய்யப்பட்ட உணவுகள், அதிரசம் முறுக்கு, சீடை வகைகள் இடம்பெற்று இருந்தன.

    கடல் உணவுப் பொருட்களான சமைக்கப்பட்ட இறால், நண்டு, வஞ்சிரம் மீன், உள்ளிட்ட மீன் வகை உணவுப் பொருட்கள் பொதுமக்களை பெரிதும் கவர்ந்தன.

    கண்காட்சியில் உணவு வீணாகுவதை தடுக்க வேண்டிய வழிமுறைகள், எந்த வகை உணவுகள் உடலுக்கு நல்லது என்பது குறித்த விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. பாரம்பரிய உணவு சார்ந்த போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    14-ந்தேதி காலை 7 மணியளவில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமானோர் பங்கேற்கிறார்கள்.

    Next Story
    ×