என் மலர்

  தமிழ்நாடு

  கொலை
  X
  கொலை

  பூந்தமல்லி அருகே தலை-2 கைகளை துண்டித்து வாலிபர் கொடூர கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையோரத்தில் தலை மற்றும் கைகள் இல்லாமல் கொலையுண்ட வாலிபர் உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  பூந்தமல்லி:

  பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தில் இருந்து கண்ணபாளையம் செல்லும் சாலையில் குப்பைக்கிடங்கு உள்ளது. இந்த குப்பைக் கிடங்கில் அவ்வப்போது குப்பைகள் தீப்பிடித்து எரிவது வழக்கம்.

  இந்த நிலையில் குப்பைக் கிடங்கு அருகே இன்று காலை தலை மற்றும் 2 கைகள் துண்டிக்கப்பட்ட வாலிபர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

  இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய 3 காவல்நிலைய போலீசாரும் வந்தனர். சம்பவம் நடந்த இடம் எந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் வரும் என்பதில் போலீசாருக்கிடையே குழப்பம் ஏற்பட்டது.

  இதில் பூந்தமல்லி, திருவேற்காடு இரு காவல்நிலைய போலீசாரிடையே எல்லைப் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இரு போலீசாரிடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

  நீண்ட நேரத்திற்கு பின்னர் எரிக்கப்பட்ட வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  கொலை செய்யப்பட்டவரின் தலை மற்றும் 2 கைகளும் அங்கு இல்லை. போலீசார் குப்பைகிடங்கில் தேடியும் அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. மர்மகும்பல் அவரை கொடூரமாக தலை, கைகளை வெட்டி கொலை செய்து உள்ளனர்.

  அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. தலை சிக்கினால் தான் அவரைப்பற்றிய விபரம் தெரியவரும்.

  இதையடுத்து குப்பைக்கிடங்கு மற்றும் அருகில் உள்ள கால்வாய்களில் கொலையுண்டவரின் தலை மற்றும் கைகளை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

  அவரை வேறு இடத்தில் வைத்து மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்து விட்டு உடலை இங்கு கொண்டு வந்து எரித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

  இது தொடர்பாக பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருவாரத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

  மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையோரத்தில் தலை மற்றும் கைகள் இல்லாமல் கொலையுண்ட வாலிபர் உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

  இதேபோல் கடந்த 2 வாரத்துக்கு முன்பு மணலியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சக்கரபாணி என்பவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அவரது தலை இதுவரை சிக்கவில்லை. அதனை தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பாணியில் கொலை நடந்து இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×