search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நிலக்கரி
    X
    நிலக்கரி

    நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி- மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

    புதிய அனல் மின் நிலையத்தில் நடைபெற்று வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூரில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் பழைய அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மேட்டூரில் உள்ள பழைய அனல் மின் நிலையத்தில் 1 வது யூனிட்டில் மட்டுமே நேற்று மின்உற்பத்தி நடைபெற்றது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மற்ற யூனிட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு 4வது யூனிட்டில் மின் உற்பத்திக்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி நள்ளிரவில் முடிவடைந்தது. இதையடுத்து இன்று காலை முதல் 4வது யூனிட்டில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2 மற்றும் 3வது யூனிட்டில் மின் உற்பத்தி நடைபெறவில்லை. 840 மெகாவாட் திறன் கொண்ட பழயை அனல் மின் நிலையத்தில் தற்போது 420 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்படது.

    மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்படுள்ளது. இதன்காரணமாக இந்த மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்வதை நிறுத்தபட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் புதிய அனல் மின் நிலையத்தில் நடைபெற்று வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×