search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊர் திரும்பும் குமரி மாணவிகள்
    X
    ஊர் திரும்பும் குமரி மாணவிகள்

    உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற குமரி மாவட்ட மாணவிகள் சென்னை வந்தனர்

    ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் நாட்டில் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளை பெற்றோர் வலியுறுத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்ட மாணவிகள் 3 பேர் பத்திரமாக சென்னை வந்தடைந்தனர். அவர்கள் நாளை சொந்த ஊர் திரும்புகிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நித்திரவிளை பகுதியை சேர்ந்த சகாதேவன் பிறீடா தம்பதியரின் மகள் ஸ்ருதி. குளப்புறம் லிட்டில் டாடா மகள் ஆஷிகா, கருங்கல் பகுதியை சேர்ந்த அஷிதா ஆகியோர் 3 மாதங்களுக்கு முன் உக்ரைன் நாட்டின் மேற்கு எல்லை பகுதியில் உள்ள உஷ்ருத் நே‌ஷனல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் படிக்க சென்றனர்.

    ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் நாட்டில் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளை பெற்றோர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பஸ்ஸில் ஹங்கேரி வந்தடைந்த மூவரும் அங்கிருந்து விமானத்தில் டெல்லி வந்து அங்கிருந்து நேற்று சென்னை வந்தனர். இதையடுத்து மருத்துவ மாணவர்களின் பெற்றோர் சென்னை சென்றுள்ளனர். அங்கிருந்து மாணவர்களை நாளை சொந்த ஊருக்கு அழைத்து வர உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×