search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாநில தேர்தல் ஆணையம்
    X
    மாநில தேர்தல் ஆணையம்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.

    வேட்பாளர்கள் 30 நாட்களில் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தலில் செலவு செய்த தொகைக்கான கணக்கை உரிய படிவத்தில் பராமரிக்க ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்து. 

    இந்த படிவத்தை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும் தங்களது செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    அவ்வாறு 30 நாட்களுக்குள் தேர்தல் கணக்குளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது தேர்தல் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு அடுத்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


    Next Story
    ×