search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அலங்காநல்லூர் கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல்தகுதி பரிசோதனை நடைபெற்றது
    X
    அலங்காநல்லூர் கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல்தகுதி பரிசோதனை நடைபெற்றது

    பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை தொடங்கியது

    ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு உடற்தகுதி பரிசோதனை அலங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் தொடங்கியது.
    அலங்காநல்லூர்:

    உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு வருகின்ற 15-ந்தேதியும் அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு உடற்தகுதி பரிசோதனை அலங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் தொடங்கியது.

    கால்நடை உதவி மருத்துவர் நவநீதகண்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதனை செய்தனர்.ஜல்லிக்கட்டில் நாட்டு காளை மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். திமிலின் அளவு, வயது 3½, 4 பற்கள் உடையது, மாட்டு கொம்புகள் இரண்டுக்கும் நடுவில் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்கிறதா எனவும் பரிசோதனை செய்தனர்.

    மேலும் நாட்டு மாடுகள் அல்லாததை தகுதி நீக்கம் செய்தனர். மாட்டின் முதுகில் தழும்புகள் இருக்கிறதா எனவும் பரிசோதனை செய்தனர். காளை வளர்ப்பவர்கள் காளைகளுடன் சேர்ந்து நிற்கும் புகைப்படம், ஆதார் கார்டு, ரே‌ஷன் கார்டு உள்ளிட்டவை கொண்டு வந்து மருத்துவரிடம் சமர்ப்பித்தனர்.

    கொரோனா தொற்று காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் காளைகள் துன்புறுத்தலை தடுக்கவும் காளை உரிமையாளர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழை வழங்கினர். இந்த பரிசோதனை முகாம் இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும். தகுதியுள்ள காளைகளுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
    Next Story
    ×