search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிஷீல்டு தடுப்பூசி
    X
    கோவிஷீல்டு தடுப்பூசி

    8 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை சென்னை வருகை

    கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் போல இந்த மாதமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொது சுகாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்குள் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்திட வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    ஆனால் தமிழகத்தின் தேவைக்கேற்ப தடுப்பூசி வினியோகம் இல்லாததால் ஒரு சில நாட்கள் பற்றாக்குறையால் முகாம்கள் நடைபெறாமல் இருக்கின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

    கடந்த மாதம் ஒதுக்கப்பட்ட 8 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை 6 மணிக்கு சென்னை வருகிறது. கடந்த மாதத்தில் ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியது.

    இந்த நிலையில் அக்டோபர் மாதத்திற்கான ஒதுக்கீடு ஒரு கோடியே 23 லட்சமாக மத்திய அரசு உயர்த்தி நிர்ணயித்துள்ளது. இது படிப்படியாக தமிழகத்திற்கு வரும் என்று தமிழக பொது சுகாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    இந்த மாதம் ஒதுக்கீடாக மத்திய அரசு 1.23 கோடி தடுப்பூசி வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 40 லட்சம் தடுப்பூசி வரை கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் போல இந்த மாதமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 1-ந்தேதி நடக்கும் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

    இதுவரையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த மாதத்திற்குள் போடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×