search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவுருவப் படங்களுக்கு மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்பி
    X
    திருவுருவப் படங்களுக்கு மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்பி

    கவிமணி, லூர்து அம்மாள் திருவுருவப் படங்களுக்கு விஜய் வசந்த் எம்பி மரியாதை

    கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை மற்றும் லூர்து அம்மாள் சைமன் திருவுருவப்படங்களுக்கு விஜய் வசந்த் எம்பி மரியாதை செலுத்தினார்.
    கன்னியாகுமரி:

    சிந்தனை சிற்பி, சுதந்திர போராட்ட தியாகி கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை 67வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதேபோல் முன்னாள் தமிழக  பெண் காங்கிரஸ் அமைச்சர் லூர்து அம்மாள் சைமன் 110வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதை யொட்டி நாகர்கோவிலில் உள்ள குமரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அவர்களது திருஉருவ படங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

    கவிமணி, லூர்து அம்மாள் திருவுருவப் படங்களுக்கு மரியாதை

    இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டாரத் தலைவர்கள் கால பெருமாள், வைகுண்டதாஸ், முருகானந்தம், செல்வராஜ், நவீன், ஸ்ரீநிவாசன், அருள்சபிதா, தங்க நடேசன், ஹெலன், அந்தோணி, முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×