என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் தமிழகத்தில் 42 நாட்களில் 5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

  சென்னை:

  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

  மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் கிராமங்களில் உள்ள மக்களை தேடிச்சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது. குறிப்பாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு வீடு தேடி சென்று சிகிச்சை அளித்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

  இதனால் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு வெளியில் செல்லாமலேயே நோய்களை தீர்த்துக் கொள்ளும் வசதி கிடைத்து உள்ளது. இதன் காரணமாக இந்த திட்டத்துக்கு சமூக வலைதளங்களில் மாபெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது.

  கடந்த 42 நாட்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 9 ஆயிரத்து 430 பேர் பயனடைந்து உள்ளனர். அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 745 பேர் பயனடைந்து இருக்கிறார்கள்.

  ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு நோய்களுக்கும் அளிக்கப்பட்ட சிகிச்சை மூலம் மாவட்டம் வாரியாக பயனடைந்தவர்கள் எண்ணிக்கை வருமாறு:-

  திருவண்ணாமலை- 50,745, ராமநாதபுரம்-48,017, சேலம்-46,515, கிருஷ்ணகிரி-32,102, விருதுநகர்-22,746, புதுக்கோட்டை-21,477, திருவாரூர்-21,251, சென்னை-16,767, தஞ்சாவூர்- 15,240, திண்டுக்கல்-13,422, தர்மபுரி-12,150, ராணிப்பேட்டை-11,685, பெரம்பலூர்-11,609, கோயம்புத்தூர்-10,676, கள்ளக்குறிச்சி-10,346, காஞ்சீபுரம்-10,343, கடலூர்- 10,063, கன்னியாகுமரி-9,912, திருவள்ளூர்-9,666, சிவகங்கை-9,613, திருச்சி-9,564, தூத்துக்குடி- 9,221, திருப்பூர்-8,926, நாகப்பட்டினம்-8,160, மதுரை-7,851, விழுப்புரம், 7,032, செங்கல்பட்டு-6,879, நீலகிரி-6,831, அரியலூர்-6,763, வேலூர்-6,636, திருநெல்வேலி-6,439, கரூர்-6,117, தேனி-5,629, ஈரோடு-5,229, திருப்பத் தூர்-4,840, நாமக்கல்-4,532, தென்காசி-2,964, மயிலாடுதுறை-1,432 மொத்தம்-5,09,430

  Next Story
  ×