search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் ரூ.102.59 பைசாவுக்கு விற்பனையான பெட்ரோல்.
    X
    கொடைக்கானலில் ரூ.102.59 பைசாவுக்கு விற்பனையான பெட்ரோல்.

    கொடைக்கானலில் ரூ.102க்கு பெட்ரோல் விற்பனை- பொதுமக்கள் அதிர்ச்சி

    பெட்ரோல் விலை உயர்வால் மோட்டார் சைக்கிள், கார் உள்பட வாகனங்கள் வைத்திருக்கும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானல்:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்த வண்ணம் உள்ளது.

    தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தலையொட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தல் முடிவு வந்த பின் படிப்படியாக உயர்த்தப்பட்டு இந்தியாவின் பல நகரங்களில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகிறது. தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ரூ.98-ஐ நெருங்கி பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.

    கோப்புப்படம்

    கொடைக்கானலில் பிரிமீயம் ரக பெட்ரோல் விலை ரூ.102.50-ஐ தொட்டது. அதே போல் 1 லிட்டர் டீசல் ரூ.93.70-க்கு விற்பனையாகிறது. இதனால் மோட்டார் சைக்கிள், கார் உள்பட வாகனங்கள் வைத்திருக்கும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், பெட்ரோல், டீசல் விலையே அரிசி, காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் விலை கொடைக்கானலில் தற்போது ரூ.100-ஐ தாண்டி விற்கப்படுகிறது. ஏற்கனவே ஊரடங்கால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் மேலும் சுமையை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினர்.

    தற்போது பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விட்டதால் இன்னும் எதுவரை செல்லும் என தெரியாமல் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 

    Next Story
    ×