search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மில்கி மிஸ்ட், அசல் புட்ஸ்
    X
    மில்கி மிஸ்ட், அசல் புட்ஸ்

    அசல் புட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது மில்கி மிஸ்ட்

    இன்ஸ்டன்ட் உணவு பொருட்கள் விற்பனைக்காக, அசல் புட்ஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது மில்கி மிஸ்ட்.
    பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதில் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மில்கி மிஸ்ட் இருக்கிறது. பால் சார்ந்த பொருட்கள் மட்டுமின்றி நிமிடங்களில் தயார் செய்து சாப்பிடக்கூடிய இன்ஸ்டன்ட் உணவு பொருட்கள் விற்பனையில் களமிறங்குகிறது.

    இதற்காக மில்கிமிஸ்ட், அசல் புட்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கி உள்ளது. எனினும், இதற்காக மில்கி மிஸ்ட் எவ்வளவு தொகையை முதலீடு செய்து இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. அசல் புட்ஸ் நிறுவனம் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    அசல் புட்ஸ் பிராண்டில் எந்த மாற்றமும் இன்றி வியாபாரத்தை விரிவுபடுத்த மில்கி மிஸ்ட் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 10 சதவீத வளர்ச்சி மற்றும் தற்போது மில்கிமிஸ்ட் வசம் இருக்கும் சுமார் 15 ஆயிரம் பிரீசர்கள் மூலம் கிடைக்கும் வருவாயை மும்மடங்கு உயர்த்த மில்கிமிஸ்ட் முடிவு செய்து இருக்கிறது.

    சதீஷ் குமார்
    மில்கி மிஸ்ட் நிறுவனர் சதீஷ் குமார்

    மார்ச் 2021-ல் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் மொத்த வருமானம் சுமார் 1000 ஆயிரம் கோடி ரூபாய். மில்கி மிஸ்ட் நிறுவனம் வருடம்தோறும் சராசரியாக 40 சதவீதம் வளர்ச்சி கண்டு வருவதாக மில்கி மிஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×