search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி மீன் மார்க்கெட்
    X
    திருச்சி மீன் மார்க்கெட்

    திருச்சி மீன் மார்க்கெட்டில் இன்று அதிகாலையிலேயே குவிந்த மக்கள்

    தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் என்பதால் கேரளா, கர்நாடக மாநிலத்தில் இருந்து மீன்களின் வரத்து குறைவாக தான் வருகிறது.

    திருச்சி:

    தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 20-ந்தேதி முதல் தமிழகத்தில் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 வரை ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதேபோன்று இறைச்சிக் கடைகள், காய்கறி கடைகள், வணிக வளாகங்கள் முழு ஊரடங்கின்போது செயல்படாது.

    இதற்கிடையே ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமையில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளில் கடந்த வாரம் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா பரவலை தடுக்க அரசு விதித்த ஊரடங்கு கட்டுப்பாடு இதன் மூலம் பயனற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. எனவே சனிக்கிழமையும் இறைச்சி, மீன் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் நாளை சனிக்கிழமை இறைச்சி கடைகள் தமிழகத்தில் செயல்படாது என்பதாலும், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதாலும் இறைச்சி கடைகள் செயல்படாது என்பதால் அசைவப் பிரியர்களும், சிறு வியாபாரிகளும் இன்றே படையெடுத்தனர்.

    அவர்கள் இறைச்சிகளை வாங்குவதற்காக திருச்சி உறையூர் மொத்த விற்பனை மீன் சந்தையில் அதிகாலையில் குவிந்தனனர்.

    மேலும் தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் என்பதால் கேரளா, கர்நாடக மாநிலத்தில் இருந்து மீன்களின் வரத்து குறைவாக தான் வருகிறது. இதனால் மொத்த விற்பனை மீன் சந்தையில் மீன்களின் விலையும் சற்று அதிகமாக விற்கப்படுகிறது.

    மாநகராட்சி ஊழியர்கள் ஒலிபெருக்கி மூலம் முக கவசம் அணியுங்கள், தனி மனித இடைவெளியை பின்பற்றுங்கள் என்று தெரிவிப்பது மட்டுமல்லாமல் காவல் துறையினரும் முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதித்து வருகின்றனர்.

    மேலும் மீன் மார்க்கெட்டில் உள்ள கழிவுநீர் வெளியேறாமல் மார்க்கெட்டின் பகுதியிலேயே தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது.

    கடந்த வருடம் ஊரடங்கின் போது இதேபோன்று புத்தூர் பகுதியிலுள்ள மீன் மார்க்கெட்டில் அதிக அளவில் மக்கள் குவிந்ததால் புத்தூர் மீன் மார்க்கெட் உறையூர் பகுதியில் மாற்றினார்கள். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலை ஒரு மணி நேரம் மட்டுமே பொதுமக்களும் சிறு வியாபாரிகளும் குவிந்தனர். அதன் பின்னர் குறைந்த அளவே பொதுமக்கள் மீன்களை வாங்கி செல்கின்றனர்.

    Next Story
    ×