என் மலர்

  செய்திகள்

  மதுரை மத்திய சிறை
  X
  மதுரை மத்திய சிறை

  ராஜீவ்காந்தி கொலை வழக்கு- ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்க சிறை நிர்வாகம் மறுப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரனின் தாய் கண் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் துணைக்காக அவரை ஒரு மாதம் விடுப்பில் அனுப்ப வேண்டும் என்று சிறை நிர்வாகத்திற்கு மனு அனுப்பியிருந்தார்.
  மதுரை:

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் உள்ளார்.

  இவருக்கு 30 நாட்கள் விடுமுறை வழங்க கேட்டு அவரது தாய் ராஜேஸ்வரி சிறை நிர்வாகத்திற்கு ஒரு மனு அனுப்பியிருந்தார். அதில் தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் துணைக்காக ரவிச்சந்திரனை ஒரு மாதம் விடுப்பில் அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

  இந்த மனுவை பரிசீலித்த சிறை நிர்வாகம் விடுமுறை அளிக்க மறுத்து விட்டது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் ரவிச்சந்திரனுக்கு வழி பாதுகாப்பு தர இயலாது என்றும் அவர் தங்குவதாக குறிப்பிட்டுள்ள முகவரி அருகே இலங்கை அகதிகள் முகாம் இருப்பதால் ரவிச்சந்திரன் அங்கு தங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  Next Story
  ×