search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இறைச்சி கடைகள் 15-ந்தேதி திறக்கக்கூடாது: மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

    பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.
    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவ பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

    இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

    எனவே, அரசு உத்தரவின்படி கண்டிப்பாக 15-ந் தேதி அனைத்து இறைச்சி கூடங்கள், இறைச்சி கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம். அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×