search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    சென்னையில் இருந்து திருமலை தரிசனத்துக்கு மீண்டும் ஆன்மிக பஸ் பயணம்

    சென்னையில் இருந்து திருமலை தரிசனத்துக்கான சுற்றுலா சேவையை ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் மீண்டும் தொடங்கி உள்ளது.
    சென்னை:

    கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக் ப்பட்டது. திருமலை திருப்பதி தரிசன சேவையையும், திருப்பதி தேவஸ்தானம் நிறுத்தி வைத்திருந்தது.

    தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 9 மாதங்களுக்கு பின்னர் திருமலை சுற்றுலா பயண தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து சென்னையில் இருந்து திருமலை தரிசனத்துக்கான சுற்றுலா சேவையை ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் மீண்டும் தொடங்கி உள்ளது.

    சென்னை, தி.நகரில், பர்கிட் சாலையில் உள்ள அலுவலகத்தில் இருந்து தினமும் காலை 5 மணிக்கு பஸ்சில் புறப்பட்டு தரிசனம் முடிந்து இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்பலாம். பக்தர்கள் வசதிக்காக ‘வால்வோ’ பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த ஆன்மீக சுற்றுலாவில் திருமலை கோவில், பத்மாவதி தாயார் கோவில் சிறப்பு தரிசனம் மற்றும் காலை, மதிய உணவு வழங்கப்படும்.

    சுற்றுலா பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை அலுவலக கவுன்டரிலும், www.aptde.in மற்றும் www.aptourism.gov.in ஆகிய இணைய தளங்களிலும் முன்பதிவு செய்யலாம்.

    மேலும் தகவலுக்கு 044-24353373 மற்றும் 9840580577 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்
    Next Story
    ×