search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    விழுப்புரத்தில் ரஜினி ரசிகர் திடீர் மரணம்

    விழுப்புரத்தில் ரஜினி ரசிகர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் பானாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 34), கூலித்தொழிலாளி. இவர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். விரைவில் ரஜினிகாந்த், அரசியல் கட்சியை தொடங்க போவதாக அறிவிக்கப்பட்டதால் அவருடைய ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் ரஜினி, தன்னுடைய உடல்நிலையை கருதி அரசியல் கட்சியை தொடங்க போவதில்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பினால் அவருடைய ரசிகரான ராஜ்குமார் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த சூழலில் நேற்று காலை ராஜ்குமார் திடீரென இறந்து விட்டார். நேற்று முன்தினம் மாலை அவர் தனது முகநூல் பக்கத்தில் ‘ரஜினிதான் என் வாழ்க்கை... இதுவே எனது கடைசி பதிவு‘ என்று பதிவிட்டிருந்தார். இதனால் ரஜினி, அரசியல் கட்சி தொடங்காத விரக்தியில் ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் பரவியது. இந்த தகவல் வாட்ஸ்-அப்- முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வைரலாகியது.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, ராஜ்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரது ஊரில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க மாலை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது திடீரென அவர் இறந்துள்ளார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை என்றனர். இதனிடையே நேற்று மாலை ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள், விழுப்புரம் பானாம்பட்டுக்கு சென்று ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
    Next Story
    ×