search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூதலூரில் ஒரே கணுவில் 5 சோளக்கதிர்கள் முளைத்திருப்பதை காணலாம்
    X
    பூதலூரில் ஒரே கணுவில் 5 சோளக்கதிர்கள் முளைத்திருப்பதை காணலாம்

    ஒரே கணுவில் 5 சோளக்கதிர்கள்- பூதலூர் ஆசிரியர் வீட்டு தோட்டத்தில் வினோதம்

    பூதலூர் ஆசிரியர் வீட்டு தோட்டத்தில் ஒரே கணுவில் 5 சோளக்கதிர்கள் முளைத்த வினோதம் நிகழ்ந்துள்ளது.
    திருக்காட்டுப்பள்ளி:

    பூதலூரை சேர்ந்தவர் குழந்தை வடிவேலு. ஆசிரியர். இவர் தனது வீட்டின் அருகில் காங்கேயர் டவுன்சிப் பகுதியில் தோட்டம் அமைத்துள்ளார்.

    அங்கு அவரை, தக்காளி, வெண்டை, சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு வளர்த்து வருகிறார். பயிர்களுக்கு இயற்கை உரங்களை குறிப்பாக ஆட்டு எருவை பயன்படுத்தி வருகிறார். இவருடைய தோட்டத்தில் பயிர் செய்துள்ள சோளம் பூத்து கதிர் விட்டுள்ளது. பொதுவாக சோளப்பயிர்களின் கணுவுக்குள் ஒரு சோளக்கதிர் மட்டுமே வளரும். ஆனால் ஆசிரியர் குழந்தை வடிவேலுவின் தோட்டத்தில் பயிர் செய்துள்ள சோளப்பயிரில் ஒரே கணுவில் 5 சோளக்கதிர்கள் முளைத்துள்ளது. இந்த வினோத சோளக்கதிரை அந்த பகுதியை சேர்ந்தவகள் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.

    இதுகுறித்து ஆசிரியர் குழந்தை வடிவேலுவிடம் கேட்டபோது, ‘தஞ்சையில் தெருவோரம் விதை விற்பனை செய்து வரும் வியாபாரி ஒருவரிடம் சோள விதை வாங்கி விதைத்தேன். இதில் சில சோளப்பயிர்களில் 5 கதிர்கள் வந்துள்ளது. நான் விதைத்த பயிர்களுக்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்’ என்றார். இதுதொடர்பாக விவசாய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிலநேரங்களில் இதுபோல் வினோதங்கள் நிகழும். மகரந்த சேர்க்கையின்போது ஏற்படும் விளைவு தான் இதற்கு காரணம்’ என கூறினார்.
    Next Story
    ×