search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பால் விநியோகம் செய்வதில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்- பால்முகவர்களுக்கு அறிவுரை

    பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள், மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள், மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களில் செல்லும் போது மிகுந்த கவனமுடன் செல்வதோடு, அப்பகுதிகளில் எங்கேனும் வாகனங்கள் பழுதுபட்டு நின்று கொண்டிருந்தால் முடிந்த வரை அந்த பால் முகவருக்கு உதவுங்கள்.

    உங்களால் உதவிட இயலாத சூழ்நிலை இருக்குமானால் உடனடியாக உங்கள் பகுதியில் உள்ள பால் முகவர்களையோ அல்லது நமது சங்கத்தின் நிர்வாகிகளையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங்கள்.

    பாதுகாப்பான முறையில் பால் விநியோகம் செய்து மக்கள் பணியில் மன நிறைவை காண்பதோடு, நம்மை தற்காத்துக் கொண்டு, நமது குடும்பத்தினரையும் நிம்மதி கொள்ளச்செய்வோம்.

    மேலும் தொடர்புக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம், செல்போன் எண்: 9600 131725, வாட்ஸ்அப்: 95661 21277. எஸ்.பொன்மாரியப்பன் : 9791072216, (மாநில பொதுச்செயலாளர்) டி.எம்.எஸ்.காமராஜ் : 8682813000, (மாநில பொருளாளர்) எஸ்.எம். குமார் : 8015265500 (மாநில ஒருங்கிணைப்பாளர்)

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×