search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியல்
    X
    வாக்காளர் பட்டியல்

    வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்- குமரியில் 2 நாட்களில் 29 ஆயிரம் பேர் மனு

    வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த 2 நாள் சிறப்பு முகாமில், மொத்தம் 29 ஆயிரம் பேர் மனு அளித்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16-ந் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர்கள் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான பணிகள் அன்றே தொடங்கியது. மேலும் சிறப்பு முகாம் நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது. இதற்காக மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,694 வாக்குச்சாவடிகளிலும் இந்த முகாம் நடந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஏராளமான வாலிபர்களும், இளம்பெண்களும் திரண்டு தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    மேலும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கவும், வேறு தொகுதிக்கு பெயரை மாற்றம் செய்யவும், பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்யவும் மனுக்கள் அளிக்கப்பட்டன.

    முதல் நாளில் குமரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாமில் மொத்தம் 10 ஆயிரத்து 118 மனுக்கள் பெறப்பட்டன. 2-வது நாளான நேற்று குமரியில் உள்ள 6 சட்டசபை தொகுகளிலும் நடைபெற்ற முகாம்களில் புதிதாக பெயர் சேர்க்க 15,534 பேர் விண்ணப்பித்தனர். இதே போல பெயர் நீக்கத்துக்கு (படிவம் 7) 1,720 பேரும், திருத்தம் செய்ய(படிவம் 8) 1,596 பேரும், ஒரே தொகுதியில் வேறு இடத்துக்கு மாறியவர்(படிவம் 8ஏ) 328 பேரும் மனு அளித்தனர். அந்த வகையில் மொத்தம் 19 ஆயிரத்து 178 மனுக்கள் பெறப்பட்டன. கடந்த 2 நாட்களில் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாக் காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் மொத்தம் 29 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்தனர். மேலும் அடுத்த மாதம் (டிசம்பர்) 12 மற்றும் 13-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    Next Story
    ×