search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆற்றில் கொட்டப்படும் வெண்டைக்காய்கள்
    X
    ஆற்றில் கொட்டப்படும் வெண்டைக்காய்கள்

    விலை வீழ்ச்சியால் விபரீதம்- ஆற்றில் கொட்டப்படும் வெண்டைக்காய்கள்

    வெண்டைக்காய்களை பறித்து சந்தைக்கு கொண்டு செல்லும் கூலி கூட கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    கம்பம்:

    கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், கரும்பு, திராட்சை மற்றும் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக முல்லை பெரியாற்றின் கடைமடை பகுதிகளில் முட்டைக்கோஸ், காலிபிளவர், கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம், பீட்ரூட் போன்ற காய்கறிகள் வருடத்தின் அனைத்து பருவத்திலும் பயிரிடப்படுகிறது. உப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 150 ஏக்கர் பரப்பளவில் வெண்டைக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது வெண்டைக்காய்கள், விளைச்சல் அடைந்து அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. 

    கடந்த மாதம் பெய்த மழை மற்றும் நோய் தாக்குதல் இல்லாததால் வெண்டைக்காய் மகசூல் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வெண்டைக்காய்களை பறித்து சந்தைக்கு கொண்டு செல்லும் கூலி கூட விவசாயிகளுக்கு கிடைக்காததால் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் செடிகளில் இருந்து பறிக்கப்படுகிற வெண்டைக்காய்களை டிராக்டரில் ஏற்றி முல்லை பெரியாற்றில் விவசாயிகள் கொட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே வெண்டைக்காய்களுக்கு போதிய விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×