search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமன்னன் ராஜராஜ சோழன்
    X
    மாமன்னன் ராஜராஜ சோழன்

    சதயவிழா- தஞ்சை பெரிய கோவிலில் முதல் முறையாக தமிழில் வழிபாடு

    தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவையொட்டி பெருவுடையாருக்கு தமிழில் தேவாரம், திருமுறைப்பாடி வழிபாடு நடந்தது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா இன்று நடைபெறுகிறது. தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவையொட்டி அவரது சிலைக்கு  கலெக்டர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு தமிழில் தேவாரம், திருமுறைப்பாடி வழிபாடு நடந்தது.

    ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழாவையொட்டி பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டது.

    மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவில் முதல்முறையாக தமிழில் வழிபாடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×