search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி கணக்கு
    X
    வங்கி கணக்கு

    கொடைக்கானலில் கிசான் திட்ட மோசடியில் 366 பேர் வங்கி கணக்கு முடக்கம்

    கொடைக்கானலில் பாரத பிரதமரின் கிசான் திட்ட மோசடியில் ரூ.6.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு 366 பேர் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கவுஞ்சி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட 16மலைக் கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.

    இங்கு மலைக்காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் விளைவிப்பதில் மலைவாழ் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் பாரதிய கிசான் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 தவணையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 366 விவசாயிகள் முறைகேடாக வங்கி கணக்கு துவங்கப்பட்டதை கண்டறிந்து வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதில் 204 விவசாயிகளிடம் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு பாரதிய கிசான் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 162 விவசாயிகளிடம் 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்வதில் தோட்டக்கலை துறை களப்பணியாளர்கள் ஈடுபட்டுவருவதாக தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    மேலும் மலைவாழ் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக 1 ஏக்கர் பரப்பளவில் பீன்ஸ் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கதொகை வழங்கப்படவுள்ளதாகவும் இத்திட்டத்தில் 4 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

    Next Story
    ×