search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயி தங்கவேலு
    X
    விவசாயி தங்கவேலு

    மலைப்பாதையில் 60 ஆண்டுகளாக மக்களின் தாகம் தீர்த்து வரும் விவசாயி

    சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மலைப்பாதையில் 60 ஆண்டுகளாக விவசாயி ஒருவர் மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறார்.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம், வாழப்பாடி, வேப்பிலைப்பட்டி ஊராட்சி, கணவாய்மேட்டை சேர்ந்தவர் விவசாயி தங்கவேலு (வயது 72). நாமக்கல், வேலம்பாளையத்தை, பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை பழனிசாமி 65 ஆண்டுகளுக்கு முன்பு வாழப்பாடி, வெள்ளாளகுண்டம் மலைக்குன்று, கணவாய்மேட்டில் குடியேறினார். அந்த வழியாக வாகன போக்குவரத்து இல்லை.

    இதனால் மலைக்குன்றை வெட்டி அமைக்கப்பட்ட கணவாய்மேட்டை கடக்க முயற்சிக்கும் வழிப்போக்கர்கள் களைப்படைந்து, இவர்களது தோட்டத்துக்கு வந்து தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு, சற்றுநேரம் மரத்தடி நிழலில் ஓய்வெடுத்து சென்றனர்.

    இதை பார்த்த தங்கவேலு, சாலையோரம் உள்ள தங்கள் நிலத்தில், மரத்தடி நிழலில், ஒரு மண் பானையில் தண்ணீர் பிடித்து வைத்து, அருகில் ஒரு குவளையை வைத்தார். இதனால் அந்த வழியாக செல்வோர் பானை நீரை குடித்து தாகம் தீர்த்துச் சென்றனர்.

    இதனால் தினமும் வைக்க ஆரம்பித்து, 60 ஆண்டுகளாக தொடர்கிறது. தற்போது 70 வயதை கடந்த தங்கவேலு, தண்ணீர் பானை வைத்துள்ள இடத்தை சுற்றி வழிப்போக்கர் அமர்ந்து இளைப்பாற, ஓய்வெடுக்க வசதியாக, தரைமட்ட திண்ணையும் அமைத்துள்ளார்.

    Next Story
    ×