search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரியனை சுற்றி தோன்றிய ஒளிவட்டம்
    X
    சூரியனை சுற்றி தோன்றிய ஒளிவட்டம்

    ராமநாதபுரம்-ராமேசுவரத்தில் தென்பட்ட காட்சி: சூரியனை சுற்றி தோன்றிய ஒளிவட்டம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணி அளவில் வானில் சூரியனை சுற்றிலும் திடீரென ஒளிவட்டம் தெரிந்தது. இந்த அதிசய காட்சியை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து, தங்களின் செல்போன்களில் படம் எடுத்துக்கொண்டனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலையில் வெயில் சுட்டெரித்தது. மதியம் 12 மணி அளவில் வானில் சூரியனை சுற்றிலும் திடீரென ஒளிவட்டம் தெரிந்தது. இந்த அதிசய காட்சியை ராமநாதபுரம், ராமேசுவரம், பனைக்குளம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து, தங்களின் செல்போன்களில் படம் எடுத்துக்கொண்டனர். இன்னும் சிலர் இதனை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என்று கண்ணாடி அணிந்து பார்த்தனர்.

    சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த வண்ண ஒளிவட்டம் தோன்றியதற்கு என்ன காரணம் என்பது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில வானவியல் கருத்தாளர் ஜெயமுருகன் கூறியதாவது:-

    சூரியனில் இருந்து பூமிக்கு வரக்கூடிய ஒளிக்கதிர்கள் வளிமண்டல அடுக்குகள் வழியாக வருகின்றன. இதுபோன்று சூரியனில் இருந்து ஒளி கதிர்கள் வளிமண்டலத்தில் வரும்போது மழை மேகங்கள், நீர் திவலைகள் இருந்தால் அதன் மீது சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு அந்த சமயத்தில் ஒளி சிதறல் ஏற்படும். அந்த ஒளிச் சிதறல்கள் சூரியனை சுற்றி பார்ப்பதற்கு ஒளிவட்டமாக தோன்றும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×