என் மலர்

  செய்திகள்

  முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்
  X
  முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்

  பள்ளி மாணவி பாலியல் புகார்- முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பள்ளி மாணவி கொடுத்த பாலியல் புகாரை தொடர்ந்து, தலைமறைவான முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை போலீசார் கைது செய்தனர்.
  நெல்லை:

  நாகர்கோவிலில் 15 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக 4 நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதற்கு சிறுமியின் தாயாரே உடந்தையாக இருந்துள்ளார். இதுதொடர்பாக நாகர்கோவில் புத்தேரி பகுதியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் (வயது 60), இடலாக்குடி பகுதியை சேர்ந்த பால் (66), அசோக்குமார் (43) மற்றும் கோட்டார் பகுதியை சேர்ந்த கார்த்திக் (28) மற்றும் சிறுமியின் தாயார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 5 பேரையும் கைது செய்ய மாவட்ட குற்ற பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் (பொறுப்பு) தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் சிறுமியின் தாயார், பால், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

  இதையடுத்து தலைமறைவான முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம் உவரி பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
  Next Story
  ×