search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய நெமர்டியன் புழு இனம்
    X
    புதிய நெமர்டியன் புழு இனம்

    கோவளம் கடற்கரையில் நெமர்டியன் புழு இனம்- சத்யபாமா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

    சென்னையின் கோவளம் கடற்கரையில் புதிய இனமான நெமர்டியன் புழு சத்யபாமா விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அண்மையில் வெவ்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களான சத்யபாமா பல்கலைக்கழகம், ரஷ்யன் அகாடமி ஆப்சயின்ஸ், ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூஷன், அமெரிக்கா ஆகிய விஞ்ஞானிகளுக்கு இடையிலான கூட்டு முயற்சியில் ஒரு புதிய இன நெமர்டியன் புழு (டெட்ராஸ்டெம்மாஃப்ரீயே) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய புழு இனம் ஒரே நேரத்தில் ஹவாய் (ஓஹு தீவு) மற்றும் இந்தியா (குறிப்பாக சென்னை, கோவளம் கடற்கரையில் பாறை நிறைந்த இடத்திலிருந்து) கண்டுபிடிக்கப்பட்டது. இதன் முடிவுகள் புகழ்பெற்ற சர்வதேச புஜூடாக்ஸாபூ இதழில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய நெமர்டியன் புழு (டெட்ராஸ்டெம்மாஃப்ரீயே) வெளி மற்றும் உள் உருவ அமைப்பின் அடிப்படையில் புதிய இனம் என்று அடையாளம் காணப்பட்டதாக தகவல் சேகரித்த சத்யபாமா ஆராய்ச்சி அறிஞர்கள் விக்னேஷ் மற்றும் ருச்சி கூறியுள்ளனர்.

    இந்திய கடலோரப் பகுதியில் நெமர்டியன் பல்லுயிரியலை ஆவணப்படுத்த தீவிர கள ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்கால ஆய்வுகளுக்கான நெமர்டீயன்களின் அடையாள குறிப்புகளையும் நாங்கள் தரப்படுத்தியுள்ளோம் என்று சத்யபாமா விஞ்ஞானி ராஜேஷ் கூறியுள்ளார்.

    இந்த நெமர்டியன் புழு இனத்திற்கு தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (என்.எம்.என்.எச்), ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூஷன், அமெரிக்காவில் பல ஆண்டுகளாக புலம் மற்றும் ஆய்வக பணியில் குறிப்பிடத்தக்க உதவிகளை மேற்கொண்ட ப்ரேயாகோட்ஸ் என்பவரின் பெயரை மரியாதை நிமித்தமாக சூட்டியுள்ளோம் என்று முன்னணி பேராசிரியர் அலெக்ஸிசெர்னிஷேவ், ரஷ்ய அகாடமி ஆப்சயின்ஸ்மற்றும் அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் நோரன்பர்க் குறிப்பிட்டுள்ளனர்.

    மேலும் இந்தப்பதிவில் முதன் முறையாக உருவவியல் மற்றும் டி.என்.ஏ குறிப்பான்கள் இரண்டையும் இணைப்பதன் மூலம் ஒருங்கிணைந்த அணுகுமுறையை கையாண்டு இந்த புதிய நெமர்டியன் புழுஇனம் (டெட்ராஸ்டெம்மாஃப்ரீயே) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சத்யபாமா இளம் விஞ்ஞானி பிரகாஷ் கூறியுள்ளார். இவர் டி.என்.ஏ அடிப்படையிலான வகை பிரிவில் அமெரிக்காவில் ஆராய்ச்சியை மேற்கொண்டவர். மேலும், இதுபோன்ற ஆராய்ச்சிகள் இந்திய கடல்சார் பல்லுயிர் தன்மையில் மிகவும் சிக்கலான இனங்களை கண்டறிய உதவும் என்றும் கூறினார். 
    Next Story
    ×